கௌஹாத்தி: பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி ஒருவர் பண படுக்கையில் படுத்து உருளும் புகைப்படம் வெளியாகி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றன. இதை ஒட்டி நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் ரூபாய் நோட்டுக்கள் விரிக்கப்பட்ட படுக்கையில் புரளும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.
அந்தக் கட்சி பிரமுகர் பெயர் பெஞ்சமின் பசுமதாரி. அவர் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யு பி பி எல்) கட்சியின் நிர்வாகி ஆவார். முகநூலில் வெளியான அந்த புகைப்படத்தில் 500 ரூபாய் நோட்டுகள் விரிக்கப்பட்ட படுக்கையில் அவர் படுத்து இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூகத்தின் பல்வேறு பிரிவினர் இந்த புகைப்படத்தை விமர்சித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
போடோலாந்து பகுதியை தளமாக கொண்டு பிரமோத் போடா தொடங்கிய யு பி பி எல் கட்சியின் நிர்வாகியாக பெஞ்சமின் பசுமை தாரை செயல்பட்டு வருகிறார். பரபரப்பு ஏற்படுத்திய அந்த புகைப்படம் கட்சியின் நேர்மைக்கு எதிரான கேள்விகளை எழுப்பி உள்ளது.
அரசியல் பிரதிநிதிகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் நெறிமுறை தர நிலைகள் குறித்த மக்களின் கவலையையும் இது தூண்டி உள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஹக்ரமா மொகிலரியின் போடோலாந்து மக்கள் முன்னணிக்கு எதிராக உருவாக்கப்பட்டது யூபிபிஎல் கட்சி ஆகும். தற்போது அந்த கட்சியின் நிர்வாகி பணத்தில் படுத்து உறங்கும் புகைப்படக் காட்சி அந்தக் கட்சியை மே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் யூ பி பி எல் கட்சியிடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த புகைப்பட சர்ச்சை குறித்து பாஜக ஓவிய நடவடிக்கை மேற்கொள்ளுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
