Manjummel Boys: சூப்பர்ஸ்டார் பட வசூலையே ஓவர்டேக் செய்த மஞ்சும்மல் பாய்ஸ்!

Advertisements

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் பட வசூலை முறியடித்துப் பாக்ஸ் ஆபிஸில் டாப் டக்கர் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

தமிழில் கடந்த மாதம் ரிலீசான படங்கள் பெரும்பாலும் தோல்வியைத் தழுவின. இதனால் கூட்டமின்றி காத்துவாங்கிய தியேட்டர்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ள திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாள படமான இது கடந்த பிப்ரவரி 22-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ஆரம்பத்தில் இப்படம் தமிழ்நாட்டில் வெறும் 50 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. பின்னர் இப்படத்திற்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்ததை அடுத்து இதன் தியேட்டர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மஞ்சும்மல் பாய்ஸ் ஓடி வருகிறது. இதனால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மலையாளத்தில் இதுவரை மோகன்லாலின் புலிமுருகன், லூசிபர் மற்றும் டோவினோ தாமஸ் நடித்த 2018 ஆகிய படங்கள் மட்டுமே ரூ.100 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளன. அந்த எலைட் லிஸ்ட்டில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படமும் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளது.

அதுமட்டுமின்றி மலையாள திரையுலக வரலாற்றில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூல் அள்ளிய திரைப்படம் என்கிற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. அதன்படி இப்படம் வெறும் 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. மறுபுறம் தமிழ்நாட்டிலும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஒரு தரமான பாக்ஸ் ஆபிஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதைப் பற்றிப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன படங்களில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் ரஜினியின் லால் சலாம் ஆகிய படங்கள் முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளது. அந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் இருந்த லால் சலாம் படத்தை மஞ்சும்மல் பாய்ஸ் பின்னுக்கு தள்ளீ உள்ளது. அதன்படி அப்படம் இதுவரை தமிழ்நாட்டில் ரூ.21 கோடி வசூலித்து உள்ளதாம். ரஜினியின் லால் சலாம் படம் தமிழ்நாட்டில் வெறும் 18 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *