
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்குச் சிறப்பு சிகிச்சைமூலம் பேசும் சக்தியை ஏற்படுத்தி மருத்துவர்கள் சாதனைபடைத்துள்ளனர்.
திண்டுக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2022 ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு பிறவியிலேயே செவி உணர்வு மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகளுக்கென்று தனி பிரிவு அமைக்கப்பட்டு “*காக்ளியர் இம்பிளான்ட்’* சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் முதல் கட்டமாகத் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி, தாடிக்கொம்பு, திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பிறவிலேயே காது கேட்காத வாய் பேச முடியாத 10 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர்களுக்குச் சிகிச்சை அளித்தால் குணமாகி விடுவார்கள் என்பதை உறுதி செய்தனர். அதன்பின் இவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இதற்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவு ரூ 7 லட்சம் ஆகும். அந்தத் தொகை அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு இலவசமாகச் சிகிச்சை அளித்து வருகின்றது. தற்பொழுது சிகிச்சைக்காகத் தேர்வு செய்யப்பட்ட 10 குழந்தைகளுக்குத் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் பத்து குழந்தைகளும் 10 நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.செவிதிறன் குறைபாடு காரணமாகசிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் தற்பொழுது பேசக் கற்று வருகின்றனர்.
தற்பொழுது 10 குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்.பின்னர் செவித்திறன் பேச்சுத் திறன் ஆகியவற்றிற்கு திறன் பெற்ற மருத்துவர்கள்மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு ஓராண்டு காலத்தில் குழந்தைகள் சரளமாகப் பேச ஆரம்பித்து விடுகின்றனர்.உலக செவி உணர்வுத் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் மருத்துவமனைகண்காணிப்பாளர் வீரமணி துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு மற்றும் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்கள் யோகானந்த் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

