பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட வாலிபர் பலி!

Advertisements

ஓச்சேரி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் சூர்யா என்கிற தமிழரசன், விஜயகணபதி.

இவர்களுக்கும் திருமால்பூரை சேர்ந்த பிரேம் என்பவருக்கும் முன் விரோதம் காரணமாகத் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடை பிரேம், தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தன் நண்பர்களுடன் தப்பிச் சென்றார்.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 நாட்களாகத் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனிப்படை போலீசார் பிரேம் உள்ளிட்ட நண்பர்கள் 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நெல்வாய் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தின் காரணமாக அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் திருமால்பூர் மற்றும் நெல்வாய் பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *