Sirkazhi Sathya:கூலிப்படை தலைவனைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்!

கூலிப்படை கும்பலின் தலைவனும் பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை மாமல்லபுரம் அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரே நேரத்தில் 3 பேரைச் சீர்காழி சத்யா ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்மீது 5 கொலைகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் நிலுவையிலிருந்து வருகிறது. இவர் 2021ம்ஆண்டு முன்னாள் அமைச்சர நயினார் நாகேந்திரன் மற்றும் வினோத் ஜி செல்வம் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கிலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடி சத்யா உட்படுத்தப்பட்டவர்.

இந்நிலையில் தொழிலதிபரை மிரட்டிக் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகச் சீர்காழி சத்யா புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரை அடுத்து அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் காரில் வந்த சீர்காழி சத்யாவை மடக்கி பிடிக்க முயற்சித்தபோது போலீசாரை தாக்கி விட்டுத் தப்பிக்க முயற்சித்தனர்.

அப்போது போலீசார் சீர்காழி சத்யாைவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காயமடைந்த அவருக்குச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரவுடி சத்யாவிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் ஆயுதங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *