
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தைக் காணலாம்.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள்மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாகத் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.48,840-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்குரூ.15 உயர்ந்து ரூ.6,105-க்கு விற்பனையானது.
இன்றைய (மார்ச் 09) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,200-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,150-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,620ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.52,960-ஆக விற்பனையாகிறது. தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1,520 வரை உயர்ந்தது. இந்த அதிரடி விலை ஏற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.79.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

