திமுகவின் வெற்றிக்குத் தொடர்ந்து பாடுபடும்- வைகோ பேச்சு..!

Advertisements

திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கும் என்றும், திமுகவின் வெற்றிக்குத் தொடர்ந்து பாடுபடும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீராவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

மதிமுகவின் சென்னை மண்டலச் செயல்வீரர்கள் கூட்டம் பூவிருந்தவல்லியில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இருவருக்கும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன் செங்கோல், வீரவாள் ஆகியவற்றைப் பரிசாக வழங்கினர்.

கூட்டத்தில் வைகோ பேசிக்கொண்டிருந்த போது தொண்டர் ஒருவர் பேசியதால் அவரைக் கோபத்துடன் வெளியே போகச் சொன்னார். அதன் பின் பேச்சைத் தொடர்ந்த அவர், போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்ததே தான் அரசியலில் செய்த தவறு எனக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *