
மத்தியபிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வர்களாக ஜெகதிஷ் தியோரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி வாகை சூடியது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் முதல்வர் தேர்வு குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில் மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முந்தைய சிவராஜ் சிங் தலைமையிலான ஆட்சி காலத்தில் இருந்த அமைச்சரவையில் உயர்கல்வி அமைச்சராக இருந்தார். 58 வயதான மோகன் யாதவ், மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். நட்ந்து முடிந்த தேர்தலில் உஜ்ஜைன் தக்ஷின் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வான மோகன் யாதவ் அம்மாநிலத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யபட்டுள்ளார். கடந்த சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசில் மோகன் யாதவ் கல்வித்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சராக இருந்த போது மோகன் யாதவ் கொண்டு வந்த திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் துணை முதல்வர்களாக ஜகதிஷ் தியோரா, மற்றும் ராஜேஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளனர்.



