
புதுடெல்லி:”லாட்டரி மாட்டின்’ உள்ளிட்ட 14 நிறுவனங்களில் ரெய்டுக்கு பின்னர் தேர்தல் நிதி பத்திரங்கள் வாங்கப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
“ரெய்ட் ஹியர்; பெய்டு தேர்”கலாய்க்கும் நெட்டிஷன்கள்
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் “இங்கே சோதனை அங்கே கப்பம் வசூல்’ (raid here; paid there) என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
‘லாட்டரி’ மார்டின் நிறுவனம் உள்ளிட்ட 14 நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் மீது இடி அல்லது ஐடிரெய்டு நடத்திய சில நாட்களில் தேர்தல் நிதிகளை வாரி வழங்கியுள்ளது அம்பலமாகி இருக்கிறது.
‘லாட்டரி’ மார்டினின் நிறுவனம் ரூ.1,368 கோடி நன்கொடை வழங்கி உள்ளது. ‘லாட்டரி கிங்’ என அழைக்கப்படும் சாண்டியாகோ மார்டினின் ஃபியூச்சர் கேமிங், ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், தேர்தல் பத்திரங்கள் மூலமாக அதிகபட்சமாக ₹1,368 கோடி ரூபாயை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
பணமோசடி வழக்கில் மார்டின் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. சாண்டியாகோ மார்டின் மற்றும் அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் தற்போது பாஜகவில் உள்ளனர். இவரின் மருமகன் ஆதவ் அர்ஜுன் விசிகவில் பொதுச்செயலாளராகச் சமீபத்தில் இணைந்தார்.
முக்கியமாக லாட்டரி’ மார்டினின் நிறுவனம் தங்கள் நிறுவனம்மீது இடி ரெய்டு நடத்திய சில நாட்களில் தேர்தல் நிதிகளை வாரி வழங்கி உள்ளது அம்பலம் ஆகி இருக்கிறது.
லாட்டரி மார்ட்டின் மீது 2021ல் டிசம்பர் 23ஆம் தேதி அமலாக்கத்துறை ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது. அதன்பின் அடுத்த 12 நாட்களில் அதாவது 2022ல் ஜனவரி 5ஆம் தேதி சுமார் 300கோடிக்கும் மேல் மார்ட்டின் நன்கொடை அளித்துள்ளார்.
முதல் இடத்தில்..
அவரின் இந்த நன்கொடை கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் பத்திரங்கள்மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனமாகும். இந்த நிறுவனம் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது.
தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12 வெளியிட உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த பத்திரங்களைத் தேர்தல் ஆணையம் பொதுவில் வெளியிட்டது.
ரிலையன்ஸ்
குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 410 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் தபஸ் மித்ரா தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை கணக்காளராகவும் இருந்து வருகிறார்.
குவிக் நிறுவனம் மொத்தத்தில் 10 கோடி ரூபாய்களை மட்டுமே இலாபமாக ஈட்டியிருக்கிறது. ஆனால் 410 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் பத்திரங்களையும் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதானி, அம்பானி
அதானி, நேரடியாகத் தேர்வுப் பத்திரங்களை வாங்கவில்லை என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் வெல்ஸ் பன் லிமிடெட் மற்றும் நவ யுகா இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள்மூலம் மறைமுகமாக அதானி பல கோடிகள் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி இருப்பதும் தெரிய வந்தது .இதேபோல் அம்பானியும் மறைமுகமாகக் குவிக் நிறுவனத்தின் மூலம் பத்திரங்களை வாங்கி இருக்கிறார்.
இதே போல் சென்னை கிரீன் வுவுட்ஸ் பிரைவேட் லிமிடெட், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், ஐ எப்பி அக்ரோ லிமிடெட், என் சி சி லிமிடெட், தேவி எஸ் லேபாரட்டரி லிமிடெட் , யுனைடெட் பாஸ்பரஸ் இந்தியா லிமிடெட் போன்ற நிறுவனங்களில் வருமானவரித்துறை அல்லது அமலாக்கத்துறை சோதனை நடத்திய உடனையே தேர்தல் பத்திரங்களை வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதன்படி ஃபியூச்சர் கேம் இன் நிறுவனத்தில் 2-4-22 அன்று சோதனை நடந்து -7- 4- 22அன்று பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது.
அரவிந்தோ பார்மாவில் 10- 11 -2 2 அன்று சோதனை நடைபெற்று 15- 11- 22 அன்று பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஸ்ரீடி சாய் எலக்ட்ரானிக்கல் நிறுவனத்தில் 20 1 2 23 அன்று சோதனை நடைபெற்று 11 01 24 அன்று பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. டாக்டர் ரெட்டி நிறுவனத்தில் 13 11 2 2 அன்று சோதனை நடைபெற்று 17 1 2 23 அன்று பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது.
கல்பதரு நிறுவனத்தில் 04 08 23 அன்று சோதனை நடைபெற்று 10 10 23 அன்று பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. மைக்ரோ லேப் நிறுவனத்தில் 14 07 22 அன்று சோதனை நடைபெற்று 10 10 22 அன்று பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. இவை உள்ளிட்ட 14 நிறுவனங்களில் இதே போல் கெடுபிடி வசூல் நடைபெற்றுள்ளது.
எந்தக் கட்சிக்கு அதிகம்?
எந்தக் கட்சி எவ்வளவு பெற்றது என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. தேர்தல் பத்திரங்கள்மூலம் அதிக நிதி பாஜகவிற்கே இதுவரை சென்றுள்ளது
அதிகபட்சமாக 11562.5 கோடி ரூபாய் நிதியில் 6566 கோடி ரூபாயை பாஜக நிதியாகப் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது
மொத்த தேர்தல் பத்திரங்களில் 46.74 சதவிகிதம் பாஜகவிற்கு சென்றுள்ளது
1093 கோடி ரூபாய் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு நிதியாகச் சென்றுள்ளது
காங்கிரஸ் கட்சிக்கு 1123 கோடி ரூபாய் நிதியாகச் சென்றுள்ளது
திமுக கட்சிக்கு 617 கோடி ரூபாய் நிதியாகச் சென்றுள்ளது
அதிமுக கட்சிக்கு 6 கோடி ரூபாய் நிதியாகச் சென்றுள்ளது
இந்தத் தேர்தல்பத்திரங்கள்மூலம் பெரிய முறைகேடு நடந்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

