
ஓடும் ரயில் ஒன்றில் சக பயணிகள் முன்னிலையில், இளைஞன், இளம் பெண்ணிற்கு மாங்கல்யம் அணிவித்து திருமணம் செய்துக்கொண்டார்.
“சும்மா பறந்து பறந்து தாலிக் கட்டுவேன்” என ரஜினிகாந்த் ஸ்டைலில் விமானங்களில் நடக்கும் திருமணங்கள் தான் தற்போதைய ட்ரெண்டாக உள்ளது.
அந்த வகையில் லோ பட்ஜெட் திருமணம் ஒன்று வட இந்தியாவில் அரங்கேறி உள்ளது. ஓடும் ரயில் ஒன்றில் சக பயணிகள் முன்னிலையில், இளைஞன், இளம் பெண்ணிற்கு மாங்கல்யம் அணிவித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவரும், மாலை மாற்றிக்கொண்டு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். அவர்களுக்கு சக பயணிகள் ஒன்றாக சேர்ந்து வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த காட்சி எப்போது எடுக்கப்பட்டது, இளம் ஜோடி யார், எதற்காக அவசர திருமணம் செய்துக்கொண்டார்கள் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. அசன்சோல்-ஜசிதி ரயிலில் இந்த காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ரயில்வேயில் பட்ஜெட் பற்றாகுறையை சமாளிக்க இதுபோன்ற திருமணங்களை நடத்தி மத்திய அரசு வருவாய் ஈட்டலாம் என்று நகைச்சுவையாக சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
இவ்வளவு எளிதாக திருமணம் செய்துக்கொள்ள முடிவதால் தான், இளம் தம்பதிகள் விரைவாக விவகாரத்து கோரி நீதிமன்றத்தை நாடிவிடுவதாக ஒருசிலர் விமர்சித்துள்ளனர்.



