
நெல்லை: நெல்லை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு மீட்கப்பட்டார்.இதனால் நெல்லை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாகத் திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூரிலிருந்து நாகர்கோவிலுக்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி நெல்லை-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றது. இந்த நிலையில் திருச்சியிலிருந்து மீன் பொருட்களை ஏற்றிக் கொண்டு நெல்லை சென்ற மற்றொரு லாரி அங்கு நின்று இருந்த லாரிமீது பயங்கரமாக மோதியது.
இதில் லாரியின் முன்பகுதி சேதமான நிலையில் ஓட்டுநர் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தார். கங்கைகொண்டான் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையங்களிலிருந்து 10க்கும் மேற்பட்ட வீரர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணி மேற்கொண்டனர். லாரியின் பாகங்களை அதிநவீன இயந்திரங்கள் கொண்டு வெட்டி அகற்றி ஓட்டுநரைப் பத்திரமாக மீட்டனர்.
நெல்லை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாகத் திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

