Lok Sabha Elections 2024: ராம சீனிவாசனுக்கு எதிராகக் திருச்சி சிவா போர்க்கொடி!

Advertisements

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே பாஜக நிர்வாகி திருச்சி சிவா சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் அறிக்கையையும் திமுக வெளியிட்டுள்ளது.

அதே போல் அதிமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதே போல் பாஜக கூட்டணியில் பாமக, தாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில் நாளைக்குள் தொகுதி பங்கீடு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலைப் பாஜக தலைமை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவில் சீட் பெற பலரும் முயற்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரையை சேர்ந்த ராம ஸ்ரீனிவாசன் திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியானது. திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராகத் துரை வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராம சீனிவாசனை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே பாஜக நிர்வாகி திருச்சி சிவா சர்ச்சையைக் கிளப்பி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர் “ வேடந்தாங்கல் பறவை வேண்டா என்ற தலைப்பில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் அறிமுகம் இல்லாத வெளிமாட்டத்தை சேர்ந்த ராம சீனிவாசனை களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும். மாறாக மண்ணின் மைந்தரைக் களமிறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.. இப்படி பாஜகவின் உண்மை தொண்டன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *