Lok Sabha Elections 2024: தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா!

மக்களவை தேர்தலில் தமிழிசை போட்டியிடலாமெனத் தகவல் வெளியான நிலையில் ராஜினாமா செய்வதாகக் கடிதம் எழுதியுள்ளார்.

தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தலில் தமிழிசை போட்டியிடலாமெனத் தகவல் வெளியான நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன், வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடுவதற்காகத் தனது கவர்னர் பதவியை இன்று (மார்ச் 18) ராஜினாமா செய்தார்.

தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் (மார்ச் 20) துவங்குகிறது. இதற்காகக் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தலில் தமிழிசை போட்டியிடலாமெனத் தகவல் வெளியான நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தமிழகத்தின் வடசென்னை தொகுதியில் போட்டியிடுவாரெனத் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கவர்னர் பதவி முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கோவா மாநில கவர்னர் பதவி அளிக்கப் பரிந்துரைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *