Lok Sabha Elections 2024: டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

Advertisements

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் , மரக்காணம் பஸ் நிலையம் அருகே உள்ள கடைத்தெருவில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து இன்று மார்ச் 29 தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த பேருந்து நிலைய டீ கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், தி.மு.க. கூட்டணி சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் டீ போட்டுக் கொடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *