
மக்களவை தேர்தல் 2024 தேதி நாளை மாலை மூன்று மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நாளைப் பிற்பகல் 3 மணிக்குச் செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது மக்களவை தேர்தல் தேதி மற்றும் சில மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தேதியும் நாளை அறிவிக்கப்பட உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், புதிய தேர்தல் ஆணையர்கள் கூட்டாகத் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.
தற்போதைய லோக்சபாவின் பதவிக்காலம் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது, அதற்கு முன் புதிய அவை அமைக்கப்பட வேண்டும். எனவே 2024 மக்களவை தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. இந்தச் சூழலில் நாடே எதிர்பார்த்த அந்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
2019 மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 10ஆம் தேதி அறிவித்தது. மக்களவைத் தேர்தல் 2019 ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. முடிவுகள் மே 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



