Lok Sabha Election 2024: ஓரு சீட் கேட்டவருக்கு 2 சீட் கொடுத்து அசிங்கப்படுத்திட்டாங்க!

Advertisements

கூட்டணி பேச்சு வார்த்தைக்கு அடிக்கடி அண்ணாமலை வீட்டுக்குச் சென்றதால் அவர் வீட்டு ரேஷன் கார்டில் ஓபிஎஸ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா ஆலங்குளத்தில் பேசினார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சிராணிக்கு வாக்கு கேட்டு ஆலங்குளத்திற்கு வந்தார் அப்போது அதிமுக பேச்சாளர் நடிகை விந்தியா கூறியதாவது:உங்கள் வீட்டிற்கு வரும் திருடனை கூட நம்பலாம். ஆனால் திமுக காரனை நம்ப கூடாது. திமுக   ஒருவேளை ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தால் திமுக 500 ரூபாய்க்கு சிலிண்டர் கொடுத்தால் சிலிண்டர் இருக்கும் ஆனால் உள்ள கேஸ் இருக்காது.
திமுக தேர்தலுக்கு முன்னாடி ஒன்னு பேசுவாங்க பின்னாடி ஒன்னு பேசுவாங்க. திமுக தேர்தல் சமயத்தில் ஓட்டை பற்றி மட்டுமே கவலைப்படுவாங்க. தேர்தல் முடிந்தவுடன் வீட்டைப் பற்றி மட்டுமே கவலைப்படுவாங்க.திராவிட மாடல் என்று ஏமாற்றும் திமுகவையும் இந்திய மாடல் என்று ஏமாற்றும் பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும் திமுக கடவுளைத் திட்டிக்கொண்டே சாமி கும்பிடும் பாஜக கடவுளே திட்டுற மாதிரிச் சாமி கும்பிடும் ஸ்டாலின் மகனைப் பற்றி மட்டுமே யோசனை செய்வார் மோடி மதத்தை மட்டுமே பற்றி யோசனை செய்வார் ஸ்டாலின் மகன் மகள் மருமகனுக்கு பினாமி மோடி அம்பானி அதானிக்கு பினாமி திமுக மக்களிடம் மட்டுமே திருடுவார்கள் பாஜக மாநிலங்களை மட்டுமே திருடுவார்கள் திமுக திருட்டில் ஸ்பெஷலிஸ்ட் பாஜக உருட்டுவதில் ஸ்பெஷலிஸ்ட்.

5 வருடத்திற்கு முன்னர் செங்கலை கொண்டு வந்தார், உதயநிதி. ஐந்து வருடம் முடிந்தும் இந்தத் தேர்தலிலும் வெட்கம் இல்லாமல் அதே செங்கலோடு வருகின்றார். அதைப் பற்றிப் பேசாமல், அதிமுக கும்பிடு போட்டார்கள், காலில் விழுந்தார்கள் என்று ஆபாசமாகப் பேசிக் வருகிறார். கொச்சைப்படுத்தி எங்களுக்கும் பேச வரும்; ஆனால், நாங்கள் பேசமாட்டோம். காரணம், நாங்கள் அதிமுககாரர்கள்.ஜிகே வாசன், அன்புமணி, பச்சமுத்து, ஜான்பாண்டியன், சரத்குமார் மற்றும் சில முகவரி இல்லாதவர்கள் சேர்ந்து அமைத்த கூட்டணி பாஜக கூட்டணி. சரத் கொஞ்சம் நியாயமானவர் என்று நினைத்தோம். தன் மனைவியுடன் சேர்ந்து பாஜகவில் சேர்ந்து விருது நகரை நான் வைத்துக் கொள்கிறேன்.

கட்சியை நீங்க வைத்துக்கோங்க என அண்ணாமலையிடம் டீல் பேசியுள்ளார். பாமக கூட்டணியில் சேர்ந்த கதை, லலிதா ஜூவல்லரி விளம்பரம் மாதிரி ஆகி விட்டது. பொம்பளை சோக்கை விடப் பாஜக சோக்கு பொல்லாதது என ராமதாஸ் கூறியும் அவர் பேச்சைக் கேட்காமல் தனது மனைவிக்கு எம்பி சீட் வேண்டும் என்பதற்காகப் பாஜகவிடம் கட்சியை அடமானம் வைத்து விட்டார் அன்புமணி. ஆட்சியைப் பிடித்தபின்னர் மூத்த தலைவர் அத்வானியையே கழட்டி விட்டவர்கள் பாஜகவினர்.

அன்பு மணி எம்மாத்திரம்? இவர்கள் கூடப் பரவாயில்லை. டிடிவியும் ஓபிஎஸ்சும் ரொம்ப அசிங்கப்பட்டுப் போனாங்க. ஓரு சீட் கேட்டவருக்கு 2 சீட் கொடுத்து அசிங்கப்படுத்திட்டாங்க. ஓபிஎஸ்சுக்கு ஒரு சீட் கூடக் கொடுக்காம அசிங்கப்படுத்திட்டாங்க. ஓபிஎஸ் அண்ணாமலையை நம்பி கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அவர் வீட்டுக்குப் போனதால, அண்ணாமலை வீட்டு ரேஷன் கார்டுல ஓபிஎஸ் பெயரைச் சேர்த்து விட்டார்கள் எனத் தகவல் வந்துள்ளது. மரியாதையா அதிமுகவில இருந்தவர் அதிமுக அலுவலகத்தை அடித்து உடைத்ததால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். எனவே முரண்பட்டு நிற்கும் பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *