களமிறங்கிய தவெக.. தாராபுரத்தில் போட்டியிட சத்தியபாமா வேட்புமனு தாக்கல்..!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட சத்தியபாமா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சத்தியபாமா. தேர்தலில் வென்று தவெக ஆட்சியமைத்த நிலையில் சத்தியபாமா சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகித் தவெகவில் இணைந்தார்.

இதேபோல் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் மரகதம். அவரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகித் தவெகவில் இணைந்தார்.

அதிமுக சார்பில் வென்றும் தேவையின்றிப் பதவி விலகி இடைத்தேர்தல் வருவதற்குக் காரணமான சத்தியபாமாவும், மரகதமும் முறையே தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் வருவதற்குக் காரணமான சத்தியபாமா தவெக சார்பில் போட்டியிடுதற்கு இன்று தனது வேட்பு மனுவைக் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *