Lok Sabha Election 2024: உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாத ஸ்டாலின்.. விந்தியா கிண்டல்!

நான் தான் தலைவன்னு ஒரு ஆட்டுக்குட்டி சுத்திக்கிட்டு இருக்கு. தேர்தல் முடிந்தவுடன் ஆடு மட்டன் பிரியாணி ஆகப்போகுது என விமர்சித்த விந்தியா தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக தாமரை கிடையாது. கருவேல மரம். அதை வளர வளர வெட்டிக்கிட்டே இருக்கணும் எனக் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ள நிலையில், இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு  தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில்,  திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்  திருப்பூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து அதிமுக கழக கொள்கை பரப்புச் துணைசெயலாளர் விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், திருப்பூர் உழைப்பை நம்பி பிழைப்பை நடத்தும் ஊர். வடநாட்டு மக்களுக்கும் வேலை தரும் ஊர். திமுக வால் வீணாகப் போன ஊர் என விமர்சித்தார்.

திருப்பூர் மக்கள் அவினாசி அத்திக்கடவுக திட்டம் தந்த அதிமுகவுக்கு ஓட்டு போடணும்.10 வருஷம் அதிமுக ஆட்சியில் எவ்வளவு பாதுகாப்பா இருந்தோம். அதிமுக ஆரம்பிச்சு 52 வருஷத்துல 30 வருஷம் ஆளுங்கட்சியா இருந்துச்சு, மக்களுக்காக வாழ்ந்தவங்க அம்மா.  அதிமுக என்ன தவறு செய்தது? மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்தது தப்பா, பெண்களுக்குத் தாலிக்கு தங்கம் தப்பா, கொரோனா காலத்துல எங்க ஆட்சி தப்பா, ஹஜ், வேளாங்கண்ணி யாத்திரைக்கு உதவியது தப்பா, மத்திய அரசு மேல பலி போடாம மக்களுக்கு நல்ல திட்டங்கள் தந்தது தப்பா எனக் கேள்வி எழுப்பினார்.

திமுக போலி விளம்பரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். திமுக 3 வருஷம் ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஒரு நல்ல திட்டம் கூடத் திமுக கொண்டு வரவில்லை. அம்மா ஆட்சியில் இருந்த நல்ல திட்டங்கள் நிறுத்தி விட்டார்கள்.  உள்ளூரில் ஓணான் பிடிக்கத் துப்பில்லாத ஸ்டாலின் டெல்லிக்கு பொய் டைனோசர் பிடிப்பாராமென விமர்சித்த விந்தியா  திமுக பொய்யான பிரசாரத்தை நம்பி உள்ளது. திமுக உதயநிதி. 2019 லத்தூக்கிட்டு வந்த செங்கல்லை இப்போதும் துக்ககிட்டு வரார். தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நல்லது செய்து இருக்கிறார். நீட் ஒழிப்போம் என்று சொன்னார்கள். மக்களுக்கு விரோதமான விஷயங்களைத் தூக்க முடியாமல் செங்கல்லைத் தூக்கிட்டு வர்றார் உதயநிதி, 500 ரூபாய்க்கு கேஸ் தருவாங்க அதுல காலி சிலிண்டர் தான்

நான் தான் தலைவன்னு ஒரு ஆட்டுக்குட்டி சுத்திக்கிட்டு இருக்கு. தேர்தல் முடிந்தவுடன் ஆடு மட்டன் பிரியாணி ஆகப்போகுது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக தாமரை கிடையாது. கருவேல மரம். அதை வளர வளர வெட்டிக்கிட்டே இருக்கணும். அரசியலுக்காக இனத்தையும் மொழியையும் மாற்றும் அண்ணாமலை நல்ல மனிதனாகக் கூட இருக்க முடியாது.தமிழ்நாட்டு மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் பாஜகவை யும், திமுகவையும் நம்பாதீர்கள். விளம்பரங்களைப் பார்த்து ஏமாரதீங்க திமுகவுக்கும் பாஜகவுக்கு பெரிய வித்தியாசம் கிடையாது. ரெண்டு கட்சியும் ஏமாற்றுவார்கள் என விந்தியா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *