Lok Sabha Election 2024: பிரதமர் மோடி சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார்!

இந்திரா காந்தி இந்த தேசத்தின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார். கச்சத்தீவு குறித்து பேசுபவர்கள் முதலில் வெஜ் பேங்க் பற்றி பேச வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநகராட்சி, ஊராட்சி தேர்தல்களில் மாவட்ட தலைவர்கள் எவ்வாறு பிரசாரம் மேற்கொள்வார்களோ அதேப்போன்று பிரதமர் மோடி பாராளுமன்றத் தேர்தலுக்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து போகிறார். தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியுமா? என முயற்சிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. தமிழக மக்கள், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும் பா.ஜ.க.வை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்த மண் சமூக விடுதலைக்கான மண் சமூக நீதிக்கான மண். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு கருத்து ஒரு பார்வை உள்ளது. இந்திரா காந்தி இந்த தேசத்தின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார்.

தற்போது கச்சத்தீவு பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் வெஜ் பேங்கை இந்திரா காந்தி இந்தியாவுடன் இணைத்தார். அங்கு அது கனிம வளங்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதுகுறித்து ஏன் மோடி பேசவில்லை? கச்சத்தீவு குறித்து பேசுபவர்கள் முதலில் வெஜ் பேங்க் பற்றி பேச வேண்டும். பிரதமர் மோடி கடந்த பத்தாண்டு காலமாக சர்வாதிகாரி போல தான் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் தான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. காங்கிரசின் நடவடிக்கையால் மட்டுமே இந்தியா தலைநிமிர்ந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *