
சென்னை: ‘திட்டங்களுக்குக் காசு இல்லை என்பவர்கள் ஓட்டிற்கு மட்டும் எப்படி காசு கொடுக்கிறார்கள்’ என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய சென்னையில் தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: நாட்டு மக்களின் நலனைக் காக்க நாம் தமிழர் கட்சி போராடுகிறது. பா.ஜ., உடன் கூட்டணி வைத்த அனைவருக்கும் உடனடியாகச் சின்னம் ஒதுக்கப்பட்டது. சீமானுக்கு கிடைக்க இருக்கும் ஓட்டுகளை தடுக்க முயற்சி நடந்து வருகிறது. ஓட்டுக்குக் காசு கொடுப்பவன் பாவி, காசு வாங்கி ஓட்டு போடுபவன் தேச விரோதி. நாங்கள் ஓட்டை விலை கொடுத்து வாங்கவில்லை.
நட்சத்திர விடுதிகள்போல் சமாதிகள்
மக்களிடமிருந்து பெற்றோம். திட்டங்களுக்குக் காசு இல்லை என்பவர்கள் ஓட்டிற்கு மட்டும் எப்படி காசு கொடுக்கிறார்கள். குற்றவாளிகளை உருவாக்கும் சமூகமாக இந்தச் சமூகம் உள்ளது.
நாங்கள் ஓட்டு கேட்டு நிற்கவில்லை. வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கையை கேட்டு நிற்கிறோம். மற்ற கட்சியினர் விலை கொடுத்து ஓட்டு வாங்குகிறார்கள். நல்ல எண்ணங்களை விதைத்து நாங்கள் ஓட்டு பெறுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் பற்று இல்லை
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: அண்ணாமலை தமிழ் பற்று இல்லாதவர். கர்நாடகாவில் பணியாற்றும்போது பெருமை மிகு கன்னடர் எனப் பேசியவர் அண்ணாமலை. அவருக்கு ஹிந்தி, உருது எனப் பன்மொழி தெரிகிறது.எனக்குத் தமிழ் தவிர வேற ஏதும் தெரியவில்லை. தாய்மொழி அழிந்து விட்டால் இனம் அழிந்து விடும். ஒவ்வொரு மொழி பேசுபவர்களைக் கண்டதும் அதே மொழியில் பேசுவது தான் மொழிபற்றா?. பதவிக்கா யாராவது தமிழர் இல்லை என்று பேசுவார்களா?. இவ்வாறு அவர் கூறினார்.

