Larissa Borges: மாரடைப்பால் பலியான சோகம்!

Advertisements

இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பிட்னஸ் பெண் தனது 33 வயதில் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…

பிரேசிலியா: சமூக வலைத்தளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை வெளியிடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதில் ஒரு சிலரின் வீடியோக்கள் வைரலாகும்போது, அவர்கள் பிரபலம் அடைகிறார்கள்.

அந்த வகையில் பிட்னஸ், பேஷன், டிராவல் குறித்த தகவலை வெளியிட்டுப் பெண் இன்புளூயன்சராகத் திகழ்ந்தவர் பிரேசில் நாட்டின் லரிசா போர்கேஸ். இவரைச் சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

அமெரிக்க ராணுவத்தினர் குவிப்பு இந்த நிலையில், இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 33 வயதில் மரணம் அடைந்துள்ளார். இந்தத் தகவலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து, அவரது குடும்பம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினர் பதிவிட்டதில் “33 வயது நிரம்பிய, மிகவும் அன்பான ஒருவரை இழந்த வலி மிகுந்தது. எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன. அவர் இல்லாத எங்களின் ஏக்கம் விவரிக்க முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கிராமடோ செல்லும்போது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 20-ந்தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அப்போது அவர் கோமா நிலைக்குச் சென்றதாகும், 2-வது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மரணத்திற்கான உண்மையான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், முதல் மாரடைப்பு ஏற்பட்டபோது மது அருந்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *