ரஜினிகாந்த் அட்வைஸ் வழங்கிய டீசர் வெளியிடு!
கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் லால் சலாம் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியாகி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் ரஜினி. லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்போது லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.
இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் லால் சலாம் படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க. குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சு இருக்கீங்க’ என வசனம் பேசி உள்ளார் ரஜினிகாந்த்.