Actor Ajith Kumar: புதிய ஸ்டைலிஷ் லுக்.. ஷாலினி வெளியிட்ட புகைப்படம் வைரல்!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை, தற்போது ஷாலினி அவரின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 300 கோடி வரை வசூல் சாதனை படைத்த இந்த படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி டாப் 1 லிஸ்டில் இடம்பிடித்தது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் பைக் ரைடு செய்வதில் கவனம் செலுத்தி வந்தார். அதே போல் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக லைகா அறிவித்த நிலையில், விக்னேஷ் சிவன் கூறிய கதை தயாரிப்பு நிறுவனம் மற்றும் அஜித்துக்கு பிடிக்காததால்… பல மாதங்களுக்கு பின்னர் இந்த படத்தில் இருந்து விக்கி வெளியேற்றப்பட்டார்.

எனவே அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் மகிழ் திருமேனிக்கு சென்றது. ‘விடாமுயற்சி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை தொடந்து, படக்குழு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. மேலும் அஜித் தன்னுடைய மகள் அனோஸ்காவின் பிறந்த நாளையும்… துபாயில் தான் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலானது.

இதைத்தொடர்ந்து, ஷாலினி அஜித் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்… அஜித்தின் ரீசென்ட் ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். கருப்பு நிற ஊடி மற்றும்  ஜீன்ஸ் பேன்ட் அணிந்து… கண்ணில் சன் கிளாஸ் போட்டுக்கொண்டு, கைகளை பாக்கெட்டில் வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *