Lakshmi Menon:”நான் தான் அவருக்குப் புரபோஸ் பண்ணேன்.. முதல் காதல் குறித்து லட்சுமி மேனன் ஓபன் டாக்.!

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை லட்சுமி மேனன் தனது முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

மலையாள படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த லட்சுமி மேனனை இயக்குனர் பிரபு சாலமன் தனது கும்கி படத்தில் நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் அவரிடன் நடிப்பை பார்த்த இயக்குனர் பிரபாகரன் தான் இயக்கிய சுந்தர பாண்டியன் படத்தில் நடிக்க வைத்தார். எனினும் சுந்தர பாண்டியன் படம் முதலில் ரீலீஸ் ஆனதால் இந்தப் படம் தான் லட்சுமி மேனனின் முதல் தமிழ் படமாக மாறியது.

இதைத் தொடர்ந்து வெளியான கும்கி படமும் ஹிட்டான நிலையில் அவருக்குத் தமிழில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. மேலும் லட்சுமி மேனனின் நடிப்பு பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது.

குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் ரெக்க எனப் பல படங்களில் நடித்தார். இதனிடையே தெலுங்கு, மலையாள படங்களிலும் லட்சுமி மேனன் நடித்து வந்தார்.

ஒருக்கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார் லட்சுமி மேனன். அவர் கடைசியாகக் கடந்த ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தில் நடித்தார். எனினும் இந்தப் படம் ப்படு தோல்வியைச் சந்தித்தது. எனினும் லட்சுமி மேனனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்தச் சூழலில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அப்போது பேசிய அவர் “ என்னிடம் யாரும் லவ் புரபோஸ் பண்ணல.. ஆனால் நான் ஒருவரிடம் என் காதலை புரபோஸ் செய்தேன். பள்ளியில் படிக்கும்போது எனக்கு ஒருவரை பிடித்திருந்தது. அவரிடம் நேராகச் சென்று என்னுடைய காதலை சொன்னேன்.. அவர் சில நாட்கள் கழித்து என்னுடைய காதலை ஒப்புக்கொண்டார்.

பின்னர் நாங்கள் அடிக்கடி பேசத் தொடங்கினோம்.. தொலைபேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். என் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காகப் போர்வைக்குள் இருந்து கொண்டு பேசி உள்ளேன்.. நாங்கள் இருவரும் வெளியே அதிகமாகப் பேசமாட்டோம்.

ஆனால் பள்ளி முடிந்த பிறகு எனக்குச் சினிமா வாய்ப்புகள் வந்ததால் என்னால் படிப்பைத் தொடர முடியவில்லை, அதே போல் காதலையும் தொடர முடியவில்லை.. சமீபத்தில் அந்த நபருக்குத் திருமணம் நடந்ததாகக் கேள்விப்பட்டேன்..” என்று கூறினார். லட்சுமி மேனன் தற்போது சப்தம், கண்ணப்பா உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *