நாட்டில் பெண் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் – லதா-ரஜினிகாந்த்

Advertisements

எந்த நாடு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக உள்ளதோ அது எல்லோருக்கும் பாதுகாப்பானது என்று, சென்னை டி.டி.கே. சாலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், நடைபெற்ற நிகழ்ச்சியில், லதா-ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை டி. டி. கே. சாலையில் ஆய்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், நடைபெற்ற நிகழ்ச்சியில்,  லதா-ரஜினிகாந்த், தான் நடத்தி வரும் பாரத சேவா என்ற அமைப்பின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற 38 மாவட்டங்களை சேர்ந்த பாரத சேவா உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்றும், எந்த நாடு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக உள்ளதோ அது எல்லோருக்கும் பாதுகாப்பானது எனவும், பயமே இல்லை என்று பெண்கள் எப்போது தெருவில் நடக்க முடிகிறதோ  அப்போது தான் பாதுகாப்பு உள்ளத என்று அர்த்தம் எனவும், பிரச்சினை வரும்போது, பக்கத்து வீட்டினர், எதிர் வீட்டினரை அழைத்தால் வரும் மனநிலை அனைவருக்கும் வரவேண்டும் என்றும் லதா-ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *