Kumbakkarai Falls: குளிக்கத் தடை!

2-வது நாளாகக் குளிக்கத் தடை!

கும்பக்கரை அருவியில் 2-வது நாளாகச் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி: தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதற்கிடையே பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்குக் கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து நீர்வரத்து ஏற்படும். Kumbakkarai Falls

தற்போது பெய்துவரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கும்பக்கரை அருவியில் இரண்டாவது நாளாகச் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.Kumbakkarai Falls

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *