
உலக புற்றுநோய் தினத்தையொட்டி மும்பை மாகிம் கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது.இதில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், குழந்தை பராமரிப்பாளர்கள் ஆகியோர் கரங்களால் சங்கிலி பிணைப்பை ஏற்படுத்தியவாறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள்.
மும்பை: உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகள், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் சார்பில் புற்றுநோய்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நோய்குறித்த தவறான கருத்துகள், பிரச்சாரங்கள், புற்றுநோயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் அடையாளம் காணவும், சரியான சிகிச்சையைப் பெறவும், இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்துஜா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. புற்றுநோய்குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாகப் புற்றுநோயாளிகள், சமூக ஆர்வலர்கள், இந்துஜா மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், குழந்தை பராமரிப்பாளர்கள் ஆகியோர் கரங்களால் சங்கிலி பிணைப்பை ஏற்படுத்தியவாறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்துஜா மருத்துவமனை அருகே உள்ள மாகிம் கடற்கரையில் நடைபெற்றது.

