
எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு கண்ணன் அருளிய கிருஷ்ண ஜெயந்தி.மக்களைக் காக்க வந்தவராய் இன்றைக்கும் பல வீடுகளில் குட்டிக் கண்ணனாக வலம் வருகிறார் பகவான் கிருஷ்ணன்…
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமா திதி ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.கிருஷ்ண பகவான் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர்.

இவர் மதுரா நகரில் தேவகி ராணியாருக்கும் வாசுதேவருக்கும் எட்டாவது மகனாக அவதாரம் எடுத்தார்.கிருஷ்ணர் பிறந்தது சிறைச்சாலையில். கிருஷ்ணர் சிறைச்சாலையில் பிறந்ததும் பின் யசோதையால் மதுரா நகரில் வளர்க்கப்பட்டார்.
மக்களைக் காக்க வந்தவராய் இன்றைக்கும் பல வீடுகளில் குட்டிக் கண்ணனாக வலம் வருகிறார் பகவான் கிருஷ்ணன்.மேலும் கிருஷ்ண பகவானை முகுந்தா கண்ணா என்று பல பெயர்களில் அழைக்கின்றோம்.கண்ணா என்றால் காப்பவன் என்றும் முகுந்தா என்றால் நமக்கு வாழ்வாதாரத்தை அளித்து வாழ்க்கையை வளம்பெற செய்து நமக்கு முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம். கிருஷ்ண பகவான் தனது தாய்மாமன் கம்சனை கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.

பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடி தந்தவர் கிருஷ்ண பகவான்.அர்ஜுனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன் தான்.தேரோட்டியாக வந்த கண்ணன் தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார்.
மேலும் தேரோட்டியாக வந்த கண்ணப் பெருமான் பாரதப்போரில் அர்ஜுனன் தனக்கு எதிரில் நின்று போரிட போகிறவர்கள் நம்மவர்கள் என்று போரிட தயங்கிய தருணத்தில் உபதேசித்த அறிவுரைகள் தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதை. வேடன் எய்த அம்பு ஒன்று கண்ணனின் காலில் தைக்க அதன் காரணமாகப் பூலோகத்தில் தனது எட்டாவது அவதாரமான கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் விஷ்ணுவாக வைகுண்டம் சென்றார் என்று கூறப்படுவதுண்டு.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருளக் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள் பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டைக் கழுவி சுத்தம் செய்து அரிசி மாவால் கோலமிட்டு மாவிளை தோரணங்களால் அலங்கரிக்கின்றோம்.

நம் வீட்டில் உள்ள சின்னக் குழந்தைகளின் கால் தடங்களை அரிசி மாவில் பதித்து வீடு எங்கும் வாசலிலிருந்து பூஜை அறைவரை பிஞ்சுக் கால் தடங்களைப் பதிக்க விடுவதால் ஆள் இல்லை கிருஷ்ணனே தனது பிஞ்சுப் பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தி தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

பின்னர் கிருஷ்ணர் சிலைக்குப் பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் கிருஷ்ணருக்கு பிடித்த துளசி இருந்தால் இன்னும் தெய்வீகமாக இருக்கும். மேலும் கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணை தயிர் அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும்.சீடை முறுக்கு லட்டு போன்ற இனிப்புப் பலகாரங்களை வைத்து வழிபட்டால் இன்னும் சிறப்பு.

பூஜையை மாலை ஆறு ஏழு மணிக்குள் செய்வது நலம். நீ எனக்கு இலையைக் கொடு, அல்லது பூவைக் கொடு, இல்லை ஒரு பழத்தைக் கொடு, அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு, எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு நல்ல சுத்தமான மனம் உள்ளவன் எதைக் கொடுத்தாலும் நான் சாப்பிடுவேன் என்றார் கீதையில் கண்ணன்.இந்தக் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பக்தி சிரத்தையோடு கிருஷ்ண பகவானை வழிபடுவோம், சகல நன்மைகளையும் பெறுவோம்.


