Leo: விஜய் படத்தில் நடிகை கிரண்!

Kiran Rathod | Leo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலம்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘லியோ’ திரைப்படத்தில் நடிகை கிரண் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதனை அவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *