ஜப்பான் வீரரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடம்பி  வெற்றி பெற்றுள்ளார்.

ஹாங்காங்கில் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடம்பி, ஜப்பானின் கோகி வடனாபே உடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் கிடம்பி  21-16, 16- 21, 21-9 என்ற செட் கணக்கில் கோகி வடனாபேவை வீழ்த்தினார். இதன்மூலம், இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடம்பி வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *