ரஷ்யாவின் எண்ணெய் ஆலைகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யாவின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் உற்பத்திப் பிரிவுகள் சேதமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, உக்ரைனின் உள்நாட்டுத் தயாரிப்பு ஆயுதங்களின் செயல்திறனை அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தொடர்ந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *