
ஈரானில் ஒப்பந்தம் எட்டப்படும், அல்லது அவர்களின் கதையை முடித்துவிடுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்..
ஈரானில் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான இறுதிச் சடங்குகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரானில் ஒன்று ஒப்பந்தம் எட்டப்படும், அல்லது அவர்களின் கதையை முடித்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார். அதை முடிப்பது கடினமாக இருக்காது என்றும் தம்மால் ஒரே மணி நேரத்தில் அவர்களுடைய பாலங்களை இடித்துத் தள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், தான் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வதையே விரும்புவதாகவும் மக்களைப் பாதிக்கக்கூடிய செயலை செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார். தற்போது, கச்சா எண்ணெய் விலை அதிகமாக குறைந்து இருப்பதாகத் தெரிவித்தார். ஈரானில் ஆட்சி மாற்றத்தை தான் விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.



