
Keralas Natural Disaster: கேரளாவில் கடந்த கால் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான விபத்துகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் அறியலாம்.
Keralas Natural Disaster: கேரளாவில் கடந்த கால் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான விபத்துகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் அறியலாம்.
கேரளாவை துரத்தும் இயற்கை சீற்றங்கள்:
கடவுளின் தேசம் எனப் போற்றப்படும் கேரளா மாநிலம், தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத சுற்றுலா தளமாகவும் உள்ளது. இங்குள்ள இயற்கை எழிலை காண்பதற்காகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, உலக நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அங்குக் குவிந்து வருகின்றனர். அதேநேரம், அந்த இயற்கையே அம்மாநில மக்களுக்கு அவ்வப்போது பேராபத்தாகவும் மாறி வருகிறது. கடந்த கால் நூற்றாண்டில் இயற்கை சீற்றத்தால் பேரழிவுகளை எதிர்கொண்ட தென்மாநிலம் கேரளா தான் என்பதி எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்கு உதாரணமாகத் தான், தற்போது வயநாட்டில் ஏற்படுள்ள நிலச்சரிவில் 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளில் கேரளா மாநிலம் எதிர்கொண்ட, மோசமான விபத்துகள் மற்றும் இயற்கை பேரிடர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
விபத்துகளும், இயற்கை சீற்றங்களும்:
கடந்த 1999ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 53 பேர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேராதவர்கள் ஆவர்.
கடந்த 2011ம் ஆண்டு சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்காகச் சென்ற பகதர்களால், புல்லுமேடு பகுதிகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 106 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் 483 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காணாமால் போயினர். 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்வாதாரத்தை இழந்தனர்
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் பருவமழை வெளுத்து வாங்க, கேரளா பேரிடரை எதிர்கொண்டது. வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாதிப்புகளில் சிக்கி 470 பேர் உயிரிழந்த நிலையில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டன
கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனமழை கொட்டியதில், பெட்டிமுடி பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மண்ணுக்கடியில் சிக்கியதாகக் கூறப்படும் 4 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்கப்படவில்லை
கேரளா மாநிலத்தில் 2018 மற்றும் 2021ம் ஆண்டில், வௌவ்வால்களால் பரவிய நிஃபா வைரஸ் பாதிப்பால் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்


