
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்க்கியிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நேபாளத்தின் இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்க்கியுடன் தொலைபேசியில் உரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
அப்போது அண்மையில் நேபாளத்தில் நிகழ்ந்த வன்முறையில் பலர் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் அமைதியையும் அரசியல் நிலைத்தன்மையையும் கொண்டுவரும் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து உறுதியான ஆதரவை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் தேசிய நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்க்கிக்கும் அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.



