Kerala Election Results 2024:கேரளாவில் முதல் முறையாகக் கால் பதித்த பாஜக.. நடிகர் சுரேஷ் கோபி வெற்றி!

Advertisements

கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

திருவனந்தபுரம்:கேரளாவின் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகின்றன. மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியான யுடிஎப் கூட்டணி 17 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎப் கூட்டணி 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

கேரளாவில் இதுவரை வெற்றியே பெறாத பாஜக முதல் முறையாக ஒரு இடத்தைக் கைப்பற்றியுள்ளது. திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *