Kayakalpa Yoga: ஆஸ்துமா மற்றும் இருதய நோயை குணமாக்கும் ஆசனம்!

Advertisements

நாம் நலமுடன் வாழப் பல வழிகள் உண்டு. உண்ணும் உணவு மட்டுமல்லாது நாம் சிஅல் உடற்பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். காயம் என்றால் உடல். உடலை நோயிலிருந்து காத்து நீண்ட ஆயுளோடு வாழக் காயகல்ப பயிற்சி மேற்கொள்வது அவசியமாகும்.

காயகல்பம் என்ற உடற்பயிற்சி நீண்ட ஆயுள் தரக்கூடியது. சித்தர்கள் நீண்ட காலம் வாழ்ந்ததற்கு காயகல்ப் பயிற்சியே காரணமாகும். காயகல்ப பயிற்சியால் நம் உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்த இயலும்.காயகல்பம் என்பது அறிவியல்பூர்வமான யோகா பயிற்சி முறையாகும். காயகல்பத்தில் மொத்தம் இரண்டு விதமான பயிற்சிகள் உள்ளன. ஒன்று அஸ்வினி முத்திரை மற்றொன்று நரம்புகள் முத்திரை. இவை இரண்டும் ஓஜஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதனைக் காலை மற்றும் மாலைகளில் இரண்டு முறைகளில் செய்ய வேண்டும்.

 

 

காயகல்ப பயிற்சியினை காலை, மாலையென இரண்டு வேலைகள் செய்து வருவதால் நீண்ட காலமாக இருக்கும் தீராத நோய்கள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து வரும். மூளையின் செல்கள் உறுதி பெற்று நினைவாற்றல் பெருக்கம் அடைகிறது. இரத்த அழுத்தம் சீராகவும் இந்த ஆசனம் உதவுகிறது.
சர்க்கரை நோய், சளி தொல்லைகள், ஆண்மை குறைவு, மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை போன்றவை சரியாகும்.

மேலும் மூலம் மற்றும் மலச்சிக்கல், ஒருபக்க தலைவலி, இருபக்க தலைவலி போன்ற தலைவலி பிரச்சனைகள் குணமாகும். ஆஸ்துமா மற்றும் இருதய நோய்கள் குணமாகும். கண்களில் வரும் பிரச்சனைகள் எனப் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறது.

உடல்சோர்வு மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும். முகம் பொலிவு பெற்று இளமை தோற்றம் அடைவதற்கும் இந்த ஆசனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அஸ்வினி முத்திரையின் நன்மைகள்: அஸ்வினி முத்திரையை மகா முத்திரை என்றும் யோகா நூல்கள் கூறுகின்றது. காயகல்பம் முறைகள் அஸ்வினி முத்திரையைப் பயிற்சி முறையாகக் கொண்டு ஆயுளை நீடித்துக் கொள்ளலாம்.

காயகல்பம் பயிற்சியில் அஸ்வினி முத்திரையைத் தொடர்ந்து செய்து வருவதினால் நரம்பு மண்டலம் பலம்பெற்று மூளை செல்களும் நாளமில்லா சுரப்பிகளும் பலம் பெருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் ஆசனவாயின் தசையும் வலுவடைந்து, பெண்களின் கருப்பை வலுப்பெறுகிறது.

இந்த முத்திரையைச் செய்யும்பொழுது நாடி நரம்புகளில் உயிரோட்டத் தடைகள் இருந்தால் நீக்கிவிடும். பால் உறுப்புகளும், பால் சுரப்பிகளும் வலுப்பெறுகின்றன. குழந்தை பிறப்பு மற்றும் பாலுறுப்பு பிரச்சனைகள் நீக்குகின்றன.

அஸ்வினி முத்திரை செய்வது எப்படி:

முதலில் சுகாசன நிலையில் அமர்ந்தபிறகு கண்களை மூடிப் பத்து வினாடிகள் மூச்சி பொறுமையாக இழுத்து விட வேண்டும். பிறகு கைகள் இரண்டையும் சின்முத்திரையில் வைத்துக் கொண்டு கண்களை மூடி, ஒரு ஐந்து முறை மெதுவாக மூச்சி இழுத்து விட வேண்டும்.

பிறகு மூச்சை உள் இழுக்கும்பொழுது ஆசன வாய் உள் இழுத்து விட வேண்டும். பத்மாசன வடிவில் அமர்ந்து கால்களை மடக்கி கொண்டு கண்களை மூடி மூச்சை இழுத்து விட வேண்டும். மூச்சை இழுக்கும்பொழுது ஆசனவாய் மேல் இழுத்து விட வேண்டும். காயகல்ப பயிற்சி நமக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *