Advertisements

மழையினால் சற்றே குறைந்திருந்த காற்று மாசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் மாசு மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது.
காற்று மாசு 500 -லிருந்து 900 ஐ எட்டியுள்ளதாக காற்றுமாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. டில்லியை பொருத்தமட்டில் காற்றின் தரம் மிக குறைந்து உடல்நல கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன் பெய்த மழையின் காரணமாக ஓரளவு குறைந்து காணப்பட்ட காற்றுமாசு தற்போது தீபாவளியன்று மக்கள் வெடித்த பட்டாசுகள் வெளிப்படுத்திய புகையினால் காற்றின் தரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது டில்லி காற்று மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
Advertisements

