Ayodhya Ram Mandir Inauguration: எம். எஸ். தோனிக்கு அழைப்பு!

விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்பு.முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு.

உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *