Kanniyakumari: அரசை ஏமாற்றி கோடி கணக்கில் மண் விற்ப்பனை.. அதிமுக புகார்!

Advertisements

குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு மண் எடுக்க அனுமதி பெற்று அரசை ஏமாற்றி பிற பணிகளுக்குக் கோடி கணக்கில் மண் விற்ப்பனை செய்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்  தளவாய் சுந்தரம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுகுறித்து கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் அளித்த பேட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நல்லூர் கிராம நிர்வாகத்திற்க்கு உட்ப்பட்ட குமாரபுரம், தோப்பூர் முருகன் கோவில் சாலை வழியாக இராமனாதிச்சன்புதூர் கோட்டக்கரை வழியாகத் தோவாளை சானலுக்கு கிழக்கு பக்கம் அமைந்துள்ள இடைமலையின் தெற்க்கு பக்கமும், நிலவியல் ஓடையின் மேற்கு பக்கமும் கிராம ஆவணங்களின் படி பட்டாதாரரின் விருப்பபடி மேடாக உள்ள மண்ணை எடுத்துக் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை பணிக்குப் பயன்படுத்திக் கொள்ள மதுரையை சார்ந்த கட்டுமான நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியானது நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியரால் மண் பரிசோதனை அறிக்கை, துணை இயக்குனர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை பரிந்துரை, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் விதிவிலக்கு போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு மண்ணெடுக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதில் அனுமதி பெறும் நபர் தமிழ்நாட்டில் எங்கும் தனது பெயரில் குவாரி, சுரங்கமோ இல்லை என்றும் எந்தப் பெயரிலும் குவாரிக்கு குத்தகை விண்ணப்பிப்பது இதுவே முதல் முறை என்ற சான்றும் வருமான வரி துறைக்கு எந்த ஒரு நிலுவைத் தொகையும் இல்லை என்றும் பிரமாண பத்திர ஆவணம் சமர்ப்பித்து பெற்றுள்ளார்.

நல்லூர் கிராமத்திற்கு உட்பட முருகன் கோவி பக்கம் புல எண் 764 ஓடையின் மேற் மண்ணெடுக்கும் நிலத்தில் உயர் மின்னழுத்த கம்பி மற்றும் புராதான சின்னங்கள் எதுவும் இல்லை என்றும் கிராம ஆவணங்களின்படி தெரிவிக்கப்பட்டதுமாகும்.அதேபோல் அகஸ்தீஸ்வரம் வட்டம் நல்லூர் கிராமத்திற்க்கு உட்ப்பட்ட அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள புல எண் கொண்ட நிலத்தில் மேடாக உள்ள மண்ணை எடுத்துக் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை NH- 47 பணிக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

இவருக்கு அனுமதி வழங்கப்பட்ட இடத்தின் அருகில் நிலவியல் ஓடை மற்றும் இடைமலை புறம்போக்கு நிலங்கள் உள்ளது எனவே அரசு நிலங்களில் எந்தவித இடையூறுகள் இல்லாமல் பட்டா நிலங்களில் மட்டும் அரசு வழிகாட்டுதலின்படி மத்திய அரசின் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என்பதால் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு அத்தியாவசியம் கருதியும் போக்குவரத்து சிரமமின்றி செல்வதற்கும் பொதுமக்கள் பயணத்தின் அத்தியாவசியத்தை கருத்தில் கொண்டு மண் எடுக்கக் கனிம விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த அனுமதியில் முக்கியமாகச் சராசரி நில மட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே மண் அகற்றப்பட வேண்டும் என்பதாகும்.அதேபோல் முக்கியமாக அருகில் உள்ள பட்டா நிலத்திற்கு 7.5 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி விட்டு மண் எடுக்க வேண்டும், அரசு புறம்போக்கு நிலத்திற்கு 10 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி விட்டு மண் எடுக்க வேண்டும் என்பதும். மொத்தம் எடுக்க வேண்டிய மண்ணின் அளவு 48,224 கன அடி மீட்டர் மண் மட்டுமே எடுக்க அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் மண் கனிமம் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை பணிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வேறு இடங்களுக்கு மண் கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டால் குத்தகை ரத்து செய்யப்படும் அது மட்டுமல்ல தகுந்த குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நல்லூர் கிராமத்திற்கு உட்பட்ட வேறொரு புல எண்ணிலிருந்து 83 ஆயிரத்து 300 கன மீட்டர் மண்ணை வெட்டி எடுக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்பகுதியில் இந்த நிறுவனமானது அரசால் அனுமதி வழங்கப்பட்ட ரெண்டு மீட்டர் அளவைவிட அதிகமாக அதாவது 10 மீட்டருக்கு மேலாக அப்பகுதியிலிருந்து மண்ணை வெட்டி எடுத்துள்ளாதாகவும் மேலும் அப்பகுதியில் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பட்டா நிலங்களுக்கு 7.5 மீட்டர் இடைவெளி விட்டு மண் அகற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையை மீறி இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு மண் எடுத்து வருகிறார்கள். அதேபோல் அரசு புறம்போக்கு நிலத்திற்கு 10 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி விடாமல் அப்பகுதி முழுவதையும் தங்கள் வசப்படுத்தி மண் எடுத்து வருகிறார்கள்.

அருகில் உள்ள செங்கல் சூளைகளுக்கும் பிற தேவைகளுக்கும் கனரக வாகனங்களின் மூலம் மண் விற்ப்பனை மூலம் மாவட்டத்தின அனைத்து பகுதிகளுக்கும் இரவு நேரங்களில் மன் கடத்தப்பட்டு கோடி கணக்கில் லாபம் சம்பாதிக்கும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்த உரிமத்தை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும், சம்மந்தப்பட்ட இடத்தில் உடனடியாகத் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்க்கொண்டு ஒப்பந்ததாரர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இன்று மாலை வாகனங்களைச் சிறைபிடித்து போராட்டம் நடத்தபோவதாகக் கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *