Mahua Moitra: அரசு பங்களாவை காலி செய்தார்!

புதுடில்லி: லோக்சபாவிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, அரசு பங்களாவை காலி செய்தார்.

மேற்கு வங்க மாநிலம் திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதி எம்.பி., யாக இருந்தார். இவர் பார்லிமென்டில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புப்படுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து பார்லி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்துத் தகுதி நீக்கம் செய்யப் பரிந்துரைத்ததை அடுத்து மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து புதுடில்லியில் உள்ள அரசு வீட்டைக் காலி செய்ய அவருக்கு லோக்சபா செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து அரசு எஸ்டேட் இயக்குநரகமும் நோட்டீஸ் அனுப்பியது. வீட்டைக் காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிராக, அவர் தொடர்ந்த வழக்கையும் டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், மஹுவா மொய்த்ரா டில்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார். முன்னதாக, அவரைக் காலி செய்ய வைக்கக் குழு ஒன்று அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *