Kanimozhi : விரைவில் மத்தியில் ஆட்சி மாறும்.. பாஜகவிற்கு ஷாக் கொடுத்த கனிமொழி!

Advertisements

மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்துவிட்டது. இதனால் வாக்குறுதிகளை நிறவேற்ற முடியவில்லையெனத் தெரிவித்த கனிமொழி, விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு 5லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம் பட்டியில் தொடங்கி திட்டங்குளம், விஜயாபுரி கரிசல்குளம், பாண்டவர்மங்கலம், கோவில்பட்டி நகரப் பகுதிகள், இனாம் மணியாச்சி மற்றும் நாலாட்டின்புதூரில் வாக்களித்த வாக்காளர்களுக்குக் கனிமொழி எம்பி நன்றி தெரிவித்து பேசுகையில்,

மகளிர் உரிமை தொகை விடுபட்ட மகளிருக்கு பரிசீலனை ‌ செய்து வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். விரைவில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படும், வேலை நாட்கள் அதிகரிக்கப்படும் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி வந்துவிட்டது. ஆகையால் வாக்குறுதி நிறைவேற்ற முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 100 நாள் வேலை செய்ததற்கான நிதியை ஒன்றிய அரசு குறைத்து வருவதால், சரியாக வேலையும், கொடுக்க முடியவில்லை ஊதியமும் கொடுக்க முடியவில்லை. எனவே ஒன்றியத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *