Mk stalin:”போதையின் பாதையில் போகாதீங்க” : முதலமைச்சர் கொடுத்த அட்வைஸ்.. வீடியோ!

Advertisements

போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காகக் காவல்துறையினரும் கடும் சட்டங்களை இயற்றி நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

“ தமிழ்நாட்டில் இளைஞர், மாணவ சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள். போதையின் பாதையில் யாரும் போகக் கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். போதை ஒழியட்டும். பாதை ஒளிரட்டும்” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

 

https://x.com/TNDIPRNEWS/status/1849311540924838243

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *