Kanchipuram: கடந்த இரு ஆண்டுகளில் 15341 பேருக்கு வேலைவாய்ப்பு!

Advertisements

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 125 சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் சுமார் 15341பேர் பயனடைந்துள்ளதாகக் காஞ்சிபுரம் திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில்  நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பெருமிதம்தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் படித்து வேலை வாய்ப்பற்றோருக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம் திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில்  நடைபெற்றது.மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை அருணகிரி வரவேற்புரையாற்றிட, கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் வாழ்த்துரையாற்றினார்.

முகாமினை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் குத்துவிளக்கு ஏற்றித் துவக்கி வைத்துச் சிறப்புரையாற்றி பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 125 சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் சுமார் 15341பேர் பயனடைந்துள்ளதாகப் பெருமிதத்தோடு தெரிவித்த தொடர்ந்து இன்னும் பல முகாம்கள் நடத்தப்படும் எனவும், வேலை வாய்ப்பற்றவர்கள் இது போன்ற முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து இம்முகாமில் நேர்முக தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.இம்முகாமில் பிரபல முன்னணி நிறுவனங்கள் உட்பட சுமார் 110 தனியார் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு சுமார் 15ஆயிரத்திற்கும் மேலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ம் வகுப்புப் படித்தவர்கள் போன்றவர்களுக்கு நேர்முக தேர்வினை நடத்தி அதன் மூலம் தேர்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *