Poonam Bajwa: நீல நிற உடையில் படு கவர்ச்சி… பிகினி பேபியாக மாறிய ஜீவா பட நடிகை!

Advertisements

பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும்… கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் பூனம் பாஜ்வா தற்போது, நீல நிற பிகினி உடையில் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

மும்பையை சேர்ந்த நடிகை என்றாலும்… தென்னிந்திய பெண்களைப் போல் முகவெட்டுடன் பார்த்ததுமே ரசிகர்களைக் கவர்ந்தவர் பூனம் பாஜ்வா. புனேவின் இங்கிலிஷ் லிட்லேச்சர் படித்து முடிந்த கையேடு… நடிகர் நவதீப்புக்கு ஜோடியாகத் தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை அழகால் கவர்ந்த பூனம் பாஜ்வாவுக்கு அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன.

தமிழில் நடிகை பூனம் பாஜ்வாவை அறிமுகப்படுத்திய பெருமை… இயக்குனர் ஹரியை தான் சேரும். பரத்தை கதாநாயகனாக வைத்து இவர் இயக்கிய ‘சேவல்’ படத்தில் பூனம் பாஜ்வா பாவாடை தாவணி அணிந்து, கிராமத்து நாயகியாக நடித்தார். சேவல் படத்தின் வெற்றிக்குப் பின்னர் தமிழிலும் படு பிஸியான பூனம், அடுத்தடுத்து… தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்தார்.

சேவல் படத்தின் கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் பொருத்தி நடித்ததால் என்னவோ… அம்மணிக்கு அடுத்தடுத்த தமிழ் படங்களிலும் குடும்ப பாங்கான வேடங்களே கிடைத்தன. ஒரே மாதிரியான வேடங்களைத் தேர்வு செய்து நடிக்க விரும்பாத பூனம் ஆரம்ப காலத்தில் தன்னை தேடி வந்த வாய்ப்புகளை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு, தமிழ் படங்களைத் தவிர… கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரின் கைவசம் ஒரு படம் கூட இல்லாத நிலையில்… தொடர்ந்து பட வாய்ப்புக்காகக் கவர்ச்சி வலை விரித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது… நீல நிற பிகினி உடையில், மித மிஞ்சிய கவர்ச்சியில்… பூனம் பாஜ்வா எடுத்துக் கொண்டுள்ள போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக நீச்சல் குளத்தில் இருந்தபடி, இவர் எடுத்துக் கொண்டுள்ள டாப் ஆங்கில் போட்டோஸ் படு வைரல் போங்க.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *