என் கூட்டணி எப்போதுமே இந்தியாவுடன்தான்..!

நாடாளுமன்றத்தில் நல்ல கருத்துக்களை பேசியுள்ளேன் என்றும், நல்ல கருத்துக்களை விவாதிக்க வேண்டும் என்றும், சென்னை விமான நிலையத்தில்,  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாடாளுமன்றத்தில் பேசிய உரை தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,  நல்ல கருத்துக்கள் விவாததிற்கு உள்ளாக வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் தான்  நல்ல கருத்துக்களை பேசியிருப்பதாவும், அதனை நான் உணர்கிறேன் என்றும், அதை மறுப்பவர்கள் விவாதிக்க வேண்டும் என்றும்  விவாதித்து உண்மை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.

மேலும், ஜனநாயகம் தொடர வேண்டும், என்னுடைய கூட்டணி இந்தியாவுடன்தான் என்றும், எனது நலன் மக்களுடைய நலன் என்றும்,  கொள்கைதான் முக்கியம், அதைநோக்கிதான் பயணிக்க வேண்டும். இப்போது கூட்டணி குறித்து எதுவும் சொல்ல முடியாது என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *