kamala harris:நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது..கமலா ஹாரிஸ் பெருமிதம்!

நியூயார்க்: இஸ்ரேல் படைகளால் நேற்று ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ள நிலையில், நீதி நிலை நாட்டப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் துணை அதிபரும், அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கமலா ஹாரிஸ், நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். “காசாவில் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்குச் சின்வார்தான் பொறுப்பு. சின்வார் கையில் அமெரிக்கர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் ரத்தக்கறை படிந்திருக்கிறது. அவர் உயிரிழந்ததன் மூலம் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்” என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோபைடனும் இதையே கூறியிருக்கிறார். ஆனால், சின்வார் கொல்லப்பட்டாலும், போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *