புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சமூக ஊடகப் பொறுப்பாளர் நிர்மல் குமார், ஈரோடு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சி.பி.ஐ. சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது. எனினும், விசாரணை முழுமையடையாததால், மறுநாள் கரூரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கேள்விகள் தொடர்ந்தன. இது விசாரணையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
இதனைத் தொடர்ந்து, விசாரணை மேலும் முன்னேறும் நிலையில், மேற்படி புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் ஆகியோர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது. டிசம்பர் 29 அன்று டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் கூடுதல் விசாரணை நடைபெறும்.
டெல்லி இந்த விவகாரத்தை தீவிரமாக கையாள்வது விஜய் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாம். முக்கியமாக தவெக தலைகளை டெல்லிக்கு வர சொன்னது விஜயை கடுமையான அதிர்ச்சிக்கு தள்ளி உள்ளதாம். டெல்லி இதில் இவ்வளவு கடுமை காட்டும் என்று அவர் நினைக்கவே இல்லையாம்.
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமை காட்டி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். இதற்கு சில பெரிய அரசியல் வழக்குகள், நாட்டை உலுக்கிய வழக்குகளில் காட்டிய அதே கடுமையான போக்கை இந்த வழக்கிலும் சிபிஐ கடைபிடிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வந்தபோது, சரியான தகவல் அவரிடம் தெரிவிக்கப்படவில்லையா?
கூட்டத்தில் மயக்கமடைந்தவர்கள் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்ட பிறகும் விஜய் ஏன் தனது பேச்சைத் தொடர்ந்தார்?
கரூர் கூட்டத்தை கருதி, வேறு இடத்தில் கூட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்களா?
வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
