மாமூல் புகாரை கிளப்பிய காடேஸ்வரா சுப்பிரமணியம்..!

பாரத அன்னையைப் போற்றும் வகையில் பாரத் கி ஜே என்று சொல்லாமல் கருணாநிதி வாழ்க என்றா சொல்ல முடியும்? என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற இந்து வணிகர்கள் நலச் சங்க மாநாட்டில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயமுத்தூரில் காவல்துறையும் ரவுடிகளும் இந்து வணிகர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதாகக் குற்றஞ்சாட்டினார். காவல்துறையினருக்கும் ரவுடிகளுக்கும் மாமூல் கொடுக்க வேண்டிய  சூழல் நிலவி வருவதாகவும் கூறினார். அரசும் மாநகராட்சியும் சிறு  வணிகர்களுக்கு அடையாள அட்டை கொடுத்துப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சுசீந்திரம் கோவில் திருவிழாவில் முழக்கமிட்டது பற்றிப் பேசிய அவர், பாரத அன்னையைப் போற்றும் வகையில் பாரத் கி ஜே என்று சொல்லாமல் கருணாநிதி வாழ்க என்றா சொல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பினார். அமைச்சர் சேகர்பாபு நாக்கில் சனி இருக்கிறது அது சட்டமன்றத் தேர்தலில் தெரியும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *