Kachabeswarar Temple: கும்பாபிஷேக விழாஏற்பாடுகள் தீவிரம்!

அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு கச்சபேஸ்வரர்  திருக்கோயில் கும்பாபிஷேகம் 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 160 சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க மகா கும்பாபிஷேக விழாஏற்பாடுகள் தீவிரம்.

கோவில் நகரம் என போற்றப்படும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி வியாழகிழமை நடைபெறுவதை ஒட்டி கோவில் வளாகத்தில் 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 160 சிவாச்சாரர்கள் வேத முழங்க ஆறு கால பூஜைகளுடன் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்.

இதனை ஒட்டி ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோயில் ஆலய குழு நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி வியாழகிழமை நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் பெருமக்கள் சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் மேலும் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அருள்மிகு கச்சபேஸ்வரர் அருள் பெறுவார்கள் எனவும் விழா குழுவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் இத்திருகோயிலில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் சன்னதியில் அமைக்கப்பட்ட கோபுரங்கள் கோவிலில் அமைந்துள்ள திருக்குளம் போன்றவைகள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவிற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *