Kanyakumari : பா.ஜ.க. விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க., விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கு எதிராக அதிமுகவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் .

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதியை தவிர எஞ்சிய ஐந்து தொகுதிகளில் பாஜக 4 தொகுதிகளிலும் தமிழ்மாநில காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் களம் காண்கிறது. கடந்த காலங்களில் அதிமுகக்கு மூன்று தொகுதியும், பாஜகவுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

ஆனால் தற்போது 6 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது கவலையளிப்பதாக அதிமுகவினர் தெரிவித்தனர். இதன்தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க., விற்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியதற்காக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கு எதிராக அதிமுகவினர் கலகக் கொடி தூக்கியுள்ளனர்.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் அதிமுக வேட்பாளராக தளவாய் சுந்தரம் நிறுத்தப்பட்டால் அவருக்கு எதிராக தேர்தல் பணி செய்வோம் என்று நாஞ்சில் முருகேசன் தெரிவித்தார். நாடார் மக்களுக்கு தளவாய் சுந்தரம் துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *